சீனாவில் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவி வூகானில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் பெரும் உயிரிழப்பையும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியது. பாதிப்பு குறைந்த நிலையில் இந்தாண்டு துவக்கத்தில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவியது. இதனால் இலட்சக்கணக்கானோர் பலியாயினர்.
தற்போது சில நாடுகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று ஏற்படாத நிலையில் சீனாவில் வடக்கு, வடமேற்கு உள்ளிட்ட 5 மாகாணங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், தலைநகர் பீய்ஜிங் நகரில் பெருமளவு பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதுடன், பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.