Our Feeds


Saturday, October 30, 2021

SHAHNI RAMEES

“பொதுபல சேனாவுடன் எனக்கு தொடர்பில்லை...”



 கடந்த 2014 ஆம் ஆண்ட ஜூலை 3 ஆம் திகதி அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச ஊடகம் ஒன்றிடம் விசேட கருத்தை வெளியிட்டிருந்தார்.

“பொதுபல சேனாவுடன் எனக்கு தொடர்பில்லை...” பொதுபல சேனா அமைப்புடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அந்த அமைப்புக்கு எந்தவிதமான உதவிகளை நான் வழங்கியதில்லை. குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்போரே, பல குழுக்கள் இடையில் பிரச்சினைகள் ஏற்படும் போது அதன் பின்னணியில் நான் இருப்பதாக கூறுகின்றனர்.

இலங்கை மனித உரிமைகள் சம்பந்தமாக ஜெனிவாவில் பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கையை குழப்ப முயற்சிக்கும் தரப்பினர் எனக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எப்போதும் நாட்டில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த நான், அந்த அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்பட எந்த நபருக்கும் இடமளிக்க போவதில்லை.

அத தெரண - 03.07.2014

அன்றைய பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச அத தெரண ஊடகத்திற்கு மாத்திரமல்ல டெய்லி மிரர் பத்திரிகைக்கும் செவ்வியை வழங்கியிருந்ததுடன் தனக்கும் ஞானசார தேரருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக கூறியிருந்தார்.

“எனக்கு பொதுபல சேனாவுடன் எந்த தொடர்பும் இல்லை. சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுமே அடிப்படையற்ற இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இப்படியான பொய்யான செய்திகள் இலங்கை ஊடகங்களில் வெளியிடப்படுவதால், சர்வதேச ஊடகங்கள் அவற்றை நம்புகின்றன. எனக்கு பொதுபல சேனாவுடன் தொடர்புள்ளது என எவராவது சாட்சியங்களை முன்வைத்தால், நான் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவேன்”

கோட்டாபய ராஜபக்ச - டெய்லி மிரர் -30-06-2014

இந்த ஊடகங்களுடன் நிறுத்தாத அன்றைய பாதுகாப்புச் செயலாளர் அன்றைய இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய மூலமாகவும் தனக்கும் பொதுபல சேனாவுடனோ, ஞானசார தேரருடனோ தொடர்பில்லை எனக் கூறியிருந்தார்.

இராணுவப் பேச்சாளர் - டெய்லி எஃப்.டி. 03-07-2014

கட்டுரையாளர் - உபுல் ஜோசப் பெர்னாண்டோ

மொழியாக்கம் - ஸ்டீபன்

நன்றி - mawratanews

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »