வில்பத்து சரணாலயத்தை அண்டிய வனப்பகுதிகளில், சொந்த செலவில் மரநடுகை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டை எதிர்வரும் பெப்ரவாி 3 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இன்றைய தினம் திகதியிடப்பட்டது.
இந்த மேன்முறையீடு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ மற்றும் எஸ். துரைராஜா ஆகியோரின் முன்னிலையில் எடுத்துகொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சட்டவிரோதமாகக் காடழிப்பு செய்யப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் நிலப்பகுதியில், மீண்டும் தமது சொந்த செலவில், மரக்கன்றுகளை நடவு செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 2020 நவம்பர் 16 ஆம் திகதி உத்தரவு பிறத்தது.