பொலன்னறுவை மாவட்டம் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தஹம் சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மகளிர் மற்றும் இளைஞர் பேரவையின் கூட்டத்தில் நேற்று அவர் உரையாற்றினார்.
முன்னதாக தஹம் சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை இளைஞர் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று அவர் முழு பொலன்னறுவை மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால், பல இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த நெருக்கடியை சமாளிக்க நீண்டகால ஏற்பாடுகள் தேவை என்றும் தஹம் சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டமும் பொலன்னறுவை மக்களும் தனது தந்தையின் இதயம் என்றும் குறிப்பிட்ட அவர் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் எதிர்காலத்தில் பொலன்னறுவை மக்களுக்கும் வரக்கூடிய எந்த சவாலையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வரும் மாகாணசபை தேர்தலில் தஹம் சிறிசேன, வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கக் கூடுமென செய்திகள் வெளிவந்துள்ளன.