Our Feeds


Wednesday, October 20, 2021

SHAHNI RAMEES

பொருட்களின் விலைகள் உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்


குருநாகல் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் முதலாம் கட்டத்தின் கீழ் இம்மாதம் 21 ஆம் திகதி திறப்பது குறித்த கலந்துரையாடல் ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் இன்று குருநாகல் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களின்படி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. அதன்படி, குருநாகல் மாவட்டத்தில் உள்ள குருநாகல், இப்பாகமுவ, நிகவெரட்டிய, மஹவ, குளியாப்பிட்டிய மற்றும் கிரியுல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தனித்தனியாக வரவழைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் பெறப்பட்டன.

21 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகளுக்குத் தேவையான சுகாதார வசதிகளை வழங்கவும் இங்கு முடிவுகள் எடுக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகளை நியமிக்கவும் முன்மொழியப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க எதிர்பார்ப்பதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

அதன்பின்னர், ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதில் அளித்தார்.

21 ஆம் திகதி பாடசாலைகள் திறப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஆசிரியர்கள் 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள் தான் இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள். ஜேவிபி பாடசாலைகளை மூட அழைப்பு விடுத்தபோது இந்த ஆசிரியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்த வரலாறு உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களிடம் பாடசாலைகளை மூடச் சொன்னார்கள். அதிபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், வெட்டப்பட்டார்கள். எனவே, ஜேவிபி மற்றும் பிற தொழிற்சங்கங்கள் என்ன கூறினாலும், பெரும்பாலான ஆசிரியர்கள் 21 ஆம் திகதி பாடசாலைக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

அவை சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் நடக்கும் விஷயங்கள். யாரும் வேலைக்கு வரவில்லை என்றால் அது பிரச்சினையாகிவிடும். அது பொதுவான விடயம். அரசாங்கத்தால் சம்பளம் கிடைக்கிறதென்றால் வேலைக்கு வரும்படி கேட்டால், நீங்கள் வேலைக்கு வர வேண்டும். இது பொதுவானது, ஆசிரியர்கள் மட்டுமல்ல வேறு யார் வேலைக்கு வராவிட்டாலும் நடக்கக் கூடியதே. இதற்கு செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் கீழ்மட்ட பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு பொருந்தாது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருட்களின் விலை உயர்வு மற்றும் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் உயிரை எப்படி காப்பாற்றுவது என்பதுதான் எங்களுக்கு இருந்த மிகப்பெரிய கேள்வியாகும். நாம் அந்த தொற்றை சந்தித்தபோது இந்த நாட்டு மக்களை பட்டியில் போடவில்லை. பின்னர் அந்த பிரச்சினையின் மூலம் வேறு சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. சில கட்டுப்பாடுகளை விதிக்க நேர்ந்தது. கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது வரிசைகள் உருவாகிறது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது விலை உயரும். அது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. இது எந்த அறிவார்ந்த நபருக்கும் தெரிந்த மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. இப்படித்தான் விலை உயர்கிறது.

அதனால் நாங்கள் பால் மா, எரிவாயு பெற வரிசை, சீனி மற்றும் அரிசி பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்த நெருக்கடிகள் சில வாரங்களில் குறைந்துவிடும். நெருக்கடி நிலையொன்றை உருவாக்க எதிர்க்கட்சிகள் இதையெல்லாம் செய்கின்றன.

எதிர்காலத்தில் எரிபொருள் பெறவும் வரிசைகள் இருக்குமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் .

நான் அவ்வாறு சொல்ல மாட்டேன். ஐக்கிய தேசியக் கட்சி தொழிற்சங்க அதிகாரி ஒருவர் செய்த குழப்பத்தால் அந்த நிலை ஏற்பட்டது. குறிப்பிட்ட நாளில் எண்ணெய் தீர்ந்துவிடும் என்றார். மக்கள் சென்று வரிசையில் காத்திருந்தனர். ஆனால் எண்ணெய் தீர்ந்துவிடவில்லை. இவர்களின் அரசியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது இந்த நாட்டின் அப்பாவி மக்கள்தான். எனவே, நாட்டு மக்களை கஷ்டத்தில் தள்ள எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் கருத்துகள் தான் இவை. அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் இதை எதிர்கொள்கிறோம்.

தற்போதைய நிலையில் அரசாங்கத்தால் தேர்தலை நடத்தி கிராமங்களுக்குச் செல்ல முடியுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

கிராமத்திற்கு செல்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எங்களால் கிராமத்திற்கு செல்ல முடியாது என்று பலர் நினைக்கிறார்கள். கொவிட் பிரச்சினை வந்தபோது தேர்தல் நடத்தக் கிடைக்காது என்றார்கள். தேர்தலை ஒரு மீட்டர் இடைவெளி வைத்து நடத்தினால் 3 நாட்கள் பிடிக்கும். இறுதியாக ஜே.ஆர். தயாரித்த தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றது. எங்களால் கிராமத்திற்கு செல்ல முடியாது என்று யாராவது நினைத்தால். இது வெறும் கனவு. நீங்கள் கிராமத்திற்கு செல்ல தேவைப்படும் போது, நாங்கள் கிராமத்திற்கு சென்று காண்பிப்போம். எனவே தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் சாகும் போது மற்றும் கோவிட் தொற்று இருந்தபோது தேர்தலை நடத்திய நாடு இது. நல்லாட்சி அரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை. இரண்டரை ஆண்டுகளாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடக்கவில்லை. எனவே, அரசாங்கம் தொடர்பில் மிகவும் அதிருப்தி நிலை உள்ளதென்றால் நாம் ஒரு தேர்தல் பற்றி பேசுவதாக இருந்தால் அது குறித்து எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி அடைய வேண்டும். நாம் கிராமத்திற்கு சென்று கிராமத்தை வெற்றி கொண்டு காண்பிப்போம். தேர்தலை சரியான நேரத்தில் நடத்த வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியான பயணம் செல்ல திட்டமிடுகிறதா என்ற ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

நீங்கள் அவர்களிடம் தான் இதனை கேட்க வேண்டும்.

உங்களுக்கு அவர்களின் ஆதரவு தேவையா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

ஆதரவு தேவையில்லை என்று நாங்கள் கூறவில்லை. யாராவது தனியாகச் செல்ல விரும்பினால், அவர்களே முடிவு செய்ய வேண்டும். மற்ற கட்சிகளின் விடயங்களை எங்களால் தீர்மானிக்க முடியாது. நாங்கள் இப்போது தனி கட்சியில் இருக்கிறோம். அவர்கள் தனி வழியில் செல்ல வேண்டுமா என்று நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். அதைப் பற்றி எங்களிடம் கேட்டுப் பயணில்லை.

அரசாங்கத்த்தால் முடியாவிட்டால் கைவிட்டு செல்ல வேண்டும். சுபீட்சமான நாட்டை உருவாக்குவதாக கூறியவர்கள் இன்று குப்பை தேசமொன்றை உருவாக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

குப்பைகள் குவிந்த நாட்டை தான் நாங்கள் காப்பாற்றினோம். கடந்த நல்லாட்சி அரசாங்கம் எந்த குப்பைகளையும் அகற்ற முடியாத அரசாங்கமாக இருந்தது. ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடன் 48 மணி நேரத்திற்குள், இந்த நாட்டை அழகுபடுத்தினோம். குப்பைகளை யார் கொண்டு வந்தார் என்பதை சஜித் மறந்துவிட்டார். இன்று அவரின் கட்சி எம்.பி.க்கள் அவர் போக வேண்டும் என்கிறார்கள். குடைகளை வைத்தும், குடைகளை மடித்து வைத்து நனைந்தவாறும் தனது கட்சி தலைமையையும் எதிர்க்கட்சி தலைமையையும் காப்பாற்ற அவர் போராடுகிறார் . இவற்றை பார்க்கும் போது, எனக்கு பரிதாபமாக இருக்கிறது.

தேர்தலை முன்னிட்டு பொருட்களின் விலையை குறைக்கவும், மக்களின் ஆதரவைப் பெறவும் தயாராக இருப்பதாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

இல்லை. மக்களின் அபிமானத்தை புதிதாக பெறவேண்டிய தேவை எமக்கு இல்லை. இந்த நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றியதே எமக்குப் போதும். எதிர்க்கட்சிகள் பல்வேறு விஷயங்களில் சென்று தொங்கினாலும், இந்த நாட்டு மக்கள் நன்றி மறக்காதவர்கள். பொருட்களின் விலைகளை அல்ல, மக்களின் உயிரைக் காப்பாற்றுவது மிகப்பெரிய விஷயம் என்று மக்களுக்குத் தெரியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சரியான முடிவுகளை எடுத்ததால் நீங்களும் நானும் இன்று இங்கு இருக்கிறோம். இல்லாவிட்டால் என்னை உங்களால் பார்க்க முடிந்திருக்காது. அல்லது என்னால் உன்னை பார்க்க முடிந்திருக்காது.

எனவே இவை பிரச்சனைகள் அல்ல, இவை தற்காலிகமானவை. கடந்த அரசாங்கம் மத்திய வங்கியைக் கொள்ளையடித்ததை போன்று இந்த அரசாங்கத்தின் மீது அகற்ற முடியாத எந்த முத்திரையும் குத்தப்படவில்லை. இந்த கோவிட் தொற்றுநோயால் வந்த பிரச்சினைகள் மட்டுமே எங்களிடம் உள்ளன. ஏனைய நாடுகளையும் பாருங்கள். இங்கிலாந்தால் எண்ணெயைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அதனால் எங்களுக்கு தற்காலிக பிரச்சினைகள் தான் உள்ளன. இவை விரைவில் சீராகும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு நாடு விரைவில் முழுமையாக திறக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பசளை பிரச்சினை தொடர்பில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்

விவசாயிகளின் பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினை. ஆனால் விவசாயிகளுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்த கமநல நிலையங்களுக்கு தீ வைத்த ஜேவிபி தான் பல இடங்களில் உள்ளது. அதன் பின்னால் ஐ.தே.கசவும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஓடுகின்றன. அதுதான் உண்மை. ஒரே மாதிரியான பொம்மைகளை தயாரித்து அதன் மீது போஸ்டரை அச்சிட்டு இவர்கள் பிரச்சினைகளை உருவாக்கப் பார்க்கிறார்கள். விவசாய சமூகத்தின் சார்பில் ஜனாதிபதி எடுத்த முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். இது ஒரு புதிய விடயம்.

மேலும், அந்த மூன்று கட்சிகளின் கொள்கையும் சேதனப் பசளை பயன்பாட்டுக்கு செல்வதாகும். சிறுநீரக நோயாளிகள் இறக்கின்றனர். அதற்காக மருத்துவமனைகளை கட்ட வேண்டியுள்ளது என்ற விடயத்துடனே இந்தப் பிரச்சினை தொடங்கியது. நாம் இப்போது சேதனப் பசளை பயன்பாட்டை தொடங்கும் போது, நாங்கள் தொடங்கிய விதத்தில் தவறு உள்ளது என்று சொல்லப்படுகிறது. இந்த பிரச்சினைகள்களை விவசாயிகளைக் கொன்றவர்கள் தான் முன்னெடுக்கிறார்கள் என்பனை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.
 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »