கராப்பிட்டி வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் ஒருவரின் பிரேத பரிசோதனையின் பின்னர் மேலதிக பரிசோதனையில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி குறித்த நபர் கராப்பிட்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
56 வயதுடைய குறித்த நபரின் பிரேத பரிசோதனை கராப்பிட்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த நபரின் உடற்பாகங்களை மேலதிக பரிசோதனைக்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்ப சட்ட வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்திருந்தார்.
குறித்த மாதிரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கை கடந்த தினம் கராப்பிட்டி வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றிருந்தது.
குறித்த அறிக்கையின் படி, உயிரிழந்த குறித்த நபரின் உடலில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.