குரல் பதிவு கொண்ட இந்தியாவின் முதல் சமூக வலைதள செயலியான Hoote அப்லிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் நிறுவனமே இந்த அப்லிகேஷனை அறிமுகம் செய்துள்ளது. மகள் சௌந்தர்யா ஆரம்பித்துள்ள புதிய App-ஐ, நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
குரல் பதிவு கொண்ட இந்தியாவின் முதல் சமூக வலைதள செயலியான இதனை உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.