Our Feeds


Saturday, October 9, 2021

Anonymous

கொரோனாவில் உயிரிழந்த 95 வீதமான குழந்தைகளின் மரணத்திற்கான காரணம் வெளியானது

 



கொரோனா தொற்று காரணமாக 67 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் கபில ஜயரத்ன இதனை தெரிவித்தார்.


அவர்களில் 13 பேர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றின் அறிகுறிகளைக் கண்டறிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால் குழந்தைகளில் 95 சதவீதமான உயிரிழப்புக்கள் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டார்.

கொரோனா நிமோனியாவே பெரும்பாலானோரின் உயிரிழப்புக்கு காரணமாகும். சுகாதார அமைப்பு மீதான எதிர்மறை உணர்வுகள் காரணமாக, குழந்தைகளுக்கு தொற்று உறுதியான பின்னரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. சிலர் வைத்தியசாலை பராமரிப்புக்கு பயப்படுவதாகவும் தொழில்முறை ஆரோக்கியத்தை நாடுவதை தவிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், நோயாளிகளுக்கு சிறந்த பராமரிப்பு வழங்க வைத்தியர்கள் தங்களை அர்ப்பணிப்பதாகவும், எனவே நாட்டின் சுகாதார அமைப்பின் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »