Our Feeds


Wednesday, October 27, 2021

Anonymous

யெமன் கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி - யெமன் கூட்டுப்படை வான்வழித் தாக்குதல் - 85 தீவிரவாதிகள் பலி

 



யெமன் – சவூதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 85 பேர் பலியாகியிருக்கிறார்கள்.


ஹவுதி கிளர்ச்சியாளர்கள் யேமன் நாட்டின் மரீப் மாகாணத்தில் எண்ணை வளம் மிக்க கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மரீப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது யேமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர் பதுங்கியிருந்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் அல்-ஜாப்வா மற்றும் அல்-கசாரா மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய போது ஹவுதி அமைப்பைச் சேர்ந்த 85 பேர் உயிரிழந்திருந்ததாகவும் அவர்கள் பயன்படுத்திய 9 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் தகர்க்கப்பட்டதாகவும் கூட்டுப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக கடந்த ஒக்டோபர் 25 அன்று யேமன் – சவூதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 264 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »