Our Feeds


Saturday, October 16, 2021

SHAHNI RAMEES

70 வருடங்களில் அச்சிட்ட பணத்தை விடவும் 20 மடங்கு அதிகமான பணம், கடந்த 20 மாதங்களில் அச்சிடப்பட்டுள்ளது: முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தகவல்.

 


இலங்கை மத்திய வங்கி – கடதாசிகளை அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்கள் எதனை கூறினாலும் நாட்டில் பொருட்களின் விலைகள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துள்ளமை இந்த பணம் அச்சிட்டமைக்கான காரணம். 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கத்துக்காக இலங்கை மத்திய வங்கி ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 768 கோடி ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளது.

“ஒக்டோபர் 15 ஆம் திகதி அதாவது நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. சரியாக கூறுவதென்றால், 19.63 பில்லியன் ரூபாய். ஆயிரத்து 963 கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.

இது 1950 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், 2020 ஜனவரி முதலாம் திகதி வரையான 70 ஆண்டு காலத்தில் அச்சிடப்பட்ட பணத்தை விட 20 மடங்கு அதிகம். கடந்த 20 மாதங்களில் மாத்திரம் இந்தளவுக்கு பணத்தை அச்சிட்டது எனக் கூறுவது ஆச்சரியமானது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »