Our Feeds


Saturday, October 9, 2021

Anonymous

தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 64 இலங்கை அகதிகள் சா்வதேச பொலிஸாரிடம் சிக்கினர்

 



இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் இருந்து படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 64 போ் மாலைத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.


இது குறித்து தமிழக கியூ பிரிவு பொலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கி இலங்கைத் தமிழா் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனர்.

மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் இவா்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக, சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்

மாலைத்தீவு அருகே உள்ள டிக்கோ காா்சியா என்ற தீவு அமெரிக்கா நாட்டின் வசம் உள்ளது. அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் அத்துமீறி இவா்களின் படகு நுழைந்ததாகக் கூறி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

இதுவரை இந்தியத் தூதரகத்துக்கு இது குறித்து எந்தவிதமான தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து 64 அகதிகள் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்ப முயன்றக வந்த தகவலையடுத்து க்யூ பிரிவு பொலிஸாா் தென் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தி உள்ளனா்.

ஆனால், தற்போது வரை இந்த 64 போ் யாா் என்பதை உளவுத்துறை பொலிஸாரால் உறுதி செய்ய முடியவில்லை. அதேநேரத்தில் கடற்பரப்பில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படும் 64 நபா்களின் விபரங்களைப் பெறுவதற்காக தமிழக பொலிஸார் சா்வதேச பொலிஸாா் உதவியை நாடியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »