ஐந்து தசாப்தங்களின் பின்னா் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து சர்வதேச வலயங்களுக்கான விமான போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதத்தின் இடைநடுவில் முதலாவது நேர அட்டவைணையின்படி இரத்மலானை விமான நிலையத்திலிருந்து மாலைத்தீவு வரையில் விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதெடார்பில் விளக்கமளித்து அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்மலானை சர்வதேச விமானநிலையம் 1938ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர் 1968 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான போக்குவரத்துகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதனால் இரத்மலானை விமான நிலை போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டன.
அதற்கமைய சுமார் 50 வருடங்களின் பின்னா் மீண்டும் இந்த விமான நிலையத்திருந்து இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளை மையப்படுத்திய வகையில் சர்வதேச வலய விமான நிலையமாக இரத்மலானை விமான நிலையத்தை தரமுயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.