உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக 5 மேல் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
வழக்கு விசாரணைகளை முன்கொண்டு செல்வதற்கான விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.