Our Feeds


Saturday, October 9, 2021

Anonymous

கட்டுப்பாட்டு விலை பட்டியலிலிருந்து 4 பொருட்களை நீக்கும் வர்த்தமானி வெளியானது

 



கட்டுப்பாட்டு விலை பட்டியலிலிருந்து 4 பொருட்களை நீக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிக்கின்றார்.


இதன்படி, பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியன, கட்டுப்பாட்டு விலை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


குறித்த 4 பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க நேற்று முன்தினம் (07) ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை தீர்மானித்திருந்தது.


இந்த நிலையில், நேற்றைய தினம் (08) இதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »