சுமார் 30 அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களை நீக்கிவிட்டு புதிய தலைவர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் முக்கிய அரச ஊடக நிறுவனம் ஆகியன உட்பட 30 நிறுவனங்கள் இதில் அடங்கும்.
இதேவேளை, மேல் மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி ஜே.எம்.சி.ஜயந்தி விஜேதுங்கவை அப்பதவியிலிருந்து நீக்கி, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
ஆனால், விஜேதுங்கவின் இடமாற்றம் குறித்து பொது நிர்வாக அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் விளக்கமளித்ததால் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.