நாட்டின் மொத்த சனத் தொகையில் ஒரு கோடியே 30 இலட்சம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் நேற்று (23) ஊடகங்களுக்கு கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் ஒரு கோடியே 50 இலட்சம் பேர் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.