Our Feeds


Sunday, October 10, 2021

Anonymous

ரஷ்யாவில் 23 பேருடன் பயணித்த விமானம் விபத்து!

 



ரஷ்யாவில் பராசூட் சாகச வீரர்கள் உட்பட 23 பேருடன் சென்ற விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


ரஷ்யாவின் டாடார்ஸ்தான் பிராந்தியத்தில் உள்ள மென்சிலின்ஸிக் என்ற பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. பாராசூட் சாகச வீரர்கள் 21 பேர் உள்பட 23 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்த 23 பேரில் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 7 பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஏனைய 16 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானம் ரஷ்யாவின் இராணுவம், விமான போக்குவரத்து மற்றும் கடற்படைக்கான தன்னார்வ சங்கத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »