(எம்.எப்.எம்.பஸீர்)
போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் விவகாரத்தில், பொதுபல சேனா பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 2022 ஜனவரி 21 இல் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் இன்று (22) தீர்மானித்தது.
கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா இதற்கான உத்தரவை பிறப்பித்தார். பீ 73854 எனும் இலக்கத்தின் கீழ் தொடுக்கப்பட்டுள்ள குறித்த வழக்கில், முறைப்பாட்டாளர் தரப்பின் சாட்சியாளர்களுக்கும் இதன்போது நீதிமன்றில் ஆஜராக நீதிவான் அறிவித்தல் விடுத்தார்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவில் 2017 ஆம் ஆண்டு போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக ஞானசார தேரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.