கொவிட் வைரஸ் தாக்கம் மேலும் ஒரு வருட காலத்திற்கு காணப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.
வறுமை கோட்டிற்கு கீழுள்ள நாடுகளுக்கு தடுப்பூசி உரிய வகையில் கிடைக்காமை, அதற்கான காரணம் என அந்த ஸ்தாபனம் கூறியுள்ளது.
இதனால், 2022ம் ஆண்டிலும் கொவிட் வைரஸ் பரவல் காணப்படுவதற்கான அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகள் முழு சனத் தொகையில் 5 வீதத்திற்கும் குறைவானோருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.
எனினும், ஏனைய நாடுகள் முழு சனத் தொகையில் 40 வீதத்திற்கு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(