பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டு முதல் ஏழு தசாப்பதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த துஸ்பிரயோகத்தில் 18 வயதிற்குட்பட்ட 216,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் பெரும் எண்ணிக்கையானவர்கள் 10 முதல் 13 வயதுடையவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய 2018 ஆம் ஆண்டின் இறுதியில் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழு 2.5 வருட விசாரணைக்குப் பின்னர் நேற்று காலை இந்த அறிக்கை வெளியிட்டது.