(எம்.மனோசித்ரா)
24 மற்றும் 28 வயதுடைய குறித்த தம்பதி பிலெஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களிடமிருந்து மடிக்கணினி, டெப், 3 கையடக்க தொலைபேசிகள் மற்றும் அச்சு இயந்திரங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்கள் இதற்கு முன்னர் நபரொருவரிடம் ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் இவர்களுக்கு எதிராக நிக்கவரெட்டிய குற்ற விசாரணைப் பிரிவினால் மஹவ நீதிவான் நீதிமன்றத்தில் 8 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் இந்த அனைத்து வழக்குகளுக்காகவும் இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவர்கள் இன்று திங்கட்கிழமை பிலெஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.