அரசாங்கத்திற்குள் முறுகல் நிலையை தோற்றுவித்திருக்கும் கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிறுவனம் குறித்து அரசாங்கத்திலுள்ள பங்காளிக் கட்சிகளின் 10 தலைவர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி மீண்டும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாளை அல்லது திங்கட்கிழமை நாடு திரும்பவுள்ளார்.
அவர் நாடு திரும்பியதன் பின்னர் கட்சித்தலைவர்கள் இடையே விசேட சந்திப்பு நடைபெறவுள்ளதோடு அதற்கு முன் 05ஆம் திகதி விமல் அணியினர் கூடி பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளனர்.