Our Feeds


Tuesday, October 5, 2021

ShortNews Admin

06 மணிநேரங்கள் பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாக்ராம் முடங்கியது ஏன்? காரணத்தை வெளியிட்டது பேஸ்புக்



உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் எப் ஆகிய சமூக வலைத்தளங்கள் சமார் 6 மணித்தியாலங்கள் நேற்று (04) முடங்கியது.


நேற்று(04) இரவு 9.30 மணியளவில் இந்த மூன்று செயலிகளும் திடீரென முடங்கியதால், சமூக வலைதள பயன்பாட்டாளர்களும், இணையவாசிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

செயலிழந்த வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களின் சேவை 6 மணித்தியாலங்களின் பின் வழமைக்கு திரும்பியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரதான சேவர் கட்டமைப்பில் ஏற்பட்ட கேளாறே, இந்த பிரச்சினைக்கான காரணம் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தள முடக்கத்திற்கு வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை பயனாளிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »