(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகராகிய உங்களுக்கு உள்ளது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சிறை அறை மாலை 5 மணிக்கு மூடப்படுகிறது. இதனால் அவர் இரவு நேரங்கயில் போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமிய மார்க்கத்தின் பிரகாரம் இரவு நேரத்தில் இரண்டு தடவைகள் மத வழிபாட்டில் (தொழுகையில்) ஈடுபடவேண்டும். ஆளுங்கட்சி எம்.பிகளும் சிறைச்சாலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வீடுகளில் இருந்து உணவுகள் கொண்டு வரப்படுகின்றன.
மேலும் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி ரிஷாதின் மைதுனரை கைது செய்து சிறையில் பல வாரங்கள் அடைத்து வைத்தார்கள். ஆனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுக்கு அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.