உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி பெற்றுக்கொள்வதற்கு செய்யவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு புனித பாப்பரசா் பிரான்சிஸ், இலங்கை கத்தோலிக்க சபைக்கு அறிவித்துள்ளாா்.
அதற்கான முயற்சிகளுக்கு தான் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
பேராயா் மெல்கம் ரஞ்சி ஆண்டகைக்கு, புனித பாப்பரசா் பிரான்ஸிஸால் எழுதப்பட்டுள்ள உத்தியோகப்பூர்வ கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகள் மற்றும் இலங்கை கத்தோலிக்க சபை எதிர்காலத்தில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கையா்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நேற்று (23) சூம் தொழில்நுட்பத்தினூடாக இடம்பெற்றது.
பேராயா் மெல்கம் ரங்சித் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கையா்களும் அதில் பங்குபற்றியுள்ளனா்.
இதன்போது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் பேராயா் மெல்கம் ரஞ்சித்தினால் பாப்பரசா் பிரான்ஸிசுக்கு அனுப்பிவைத்த கடிதத்துக்கு அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.
பாப்பரசர் பிரான்சிஸின் கடிதத்தில்
நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த கடிதம் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தகிதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலும், தற்போது இடம்பெற்று வரும் விசாரணை நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளித்திருந்தீர்கள் என தெரிவித்துள்ள பாப்பரசர். குறித்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.