நாட்டில் கடந்த 02 மாதங்களில் மூன்றாவது தடவையாக மீண்டும் அரிசி விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு புறக்கோட்டை அரிசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாடு அரிசி 15 ரூபாவினாலும், சம்பா அரிசி 10 ரூபாவினாலும், கீரி சம்பா 30 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் 110 ரூபாவுக்கு விற்பனையாகும் கெக்குலு அரிசியின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.
நாடு – 130 ரூபா
சம்பா – 150 ரூபா
கீரி சம்பா – 195 ரூபா