Our Feeds


Friday, September 17, 2021

Anonymous

SHORT_BREAKING: இப்றாஹீம் குடும்பத்திற்கு சொந்தமான செப்பு தொழிற்சாலை விமலின் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது



(இராஜதுரை ஹஷான்)


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இப்ராஹிம் குடும்பத்தினருக்கு சொந்தமான செப்பு கைத்தொழிற்சாலையை அமைச்சரவை அங்ககீகாரத்துடன் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு கீழ் கொண்டு வரவும், செப்பு கைத்தொழிலுக்கு தேவையான பொருட்களை விநியோகிக்கும் நிலையமாக மாற்றியமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.


வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள இப்ராஹிம் குடும்பத்தினருக்கு சொந்தமான செப்பு கைத்தொழிற்சாலையை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இந்த செப்பு கைத்தொழிற்சாலை கடந்த மே மாதம் 20ஆம் திகதி அரசுடைமையாக்கப்பட்டது. அரசுடமையாவதற்கு முன்னர் இப்ராஹிம் குடும்பத்தினரது சொத்தாக இத்தொழிற்சாலை காணப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »