Our Feeds


Monday, September 27, 2021

Anonymous

SHORT_BREAKING: பிறப்பிலேயே முள்ளந்தண்டு நோயால் பாதிக்கப்பட்ட மாணவி O/L பரீட்சையில் 09 பாடங்களிலும் 09 A பெற்று பெரும் சாதனை! - VIDEO



திக்வெல்ல பிரதேசத்தில் முள்ளந்தண்டு நோயால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் 2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 9A சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளார்.


இவர் தனது கடின உழைப்பால் இந்த சித்தியைப் பெற்று பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் அவரது பாடசாலைக்கும் பெறுமையை தேடிக் கொடுத்துள்ளார்.

“தெவுமி ரன்சரா” என்ற இந்தச் சிறுமி, பிறப்பிலிருந்தே முள்ளந்தண்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இதை பொருட்படுத்தாமல் தனது கல்வியை தொடர்ந்து, ஏனையோருக்கு முன்மாதிரியாக திகழ்கின்றாள் இந்தச் சிறுமி.

தான் மேலதிக வகுப்பு எதற்கும் செல்லவில்லை என்றும், 9A சித்தியைப் பெற தான் கடினமாக உழைத்ததாகவும் அதற்கான பலனை அடைந்துள்ளதாகவும் அந்தச் சிறுமி குறிப்பிடுகின்றார்.

கல்வியையும் தாண்டி குறித்த சிறுமி சங்கீதத்திலும் அதீத ஈடுபாடு உள்ளவராக இருக்கின்றார்.

இதேவேளை, இந்தச் சிறுமியின் வெற்றிக்குப்பின் அவரது தாயாரே உள்ளார் என்பது சிறப்பம்சமாகும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »