Our Feeds


Thursday, September 16, 2021

Anonymous

அமைச்சர் லொஹான் சிறை கைதியை மிரட்டிய பின் - அநுராதபுரம் சிறைக்கு சென்ற நாமல் ராஜபக்ஸ (PHOTO)



விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.


அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்திய சம்பவத்தை அடுத்தே, நாமல் ராஜபக்ஸ இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தமை தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கைதிகள் தன்னை சந்திக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்த நிலையிலேயே தான் அவர்களை சந்தித்து, அவர்களின் துன்பங்களை பகிர்ந்துக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

கைதிகள் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலையானவுடன், அவர்களின் மறுவாழ்வு மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைவது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாகவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »