மாவட்டங்களுக்கு இடையிலான அல்லது மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது கீழ் மட்டத்தில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட ஆரம்பத்தில் பொதுமக்கள் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட்டதாகவும், ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்காமல் பலர் செயற்படுவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, எதிர்வரும் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்து வேண்டியது அவசியம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.