கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்து லங்கா வைத்தியசாலையின் கழிப்பறையிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, குருணாகல், மஹவ பகுதியில் வைத்து இச்சந்தேகநபர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே, திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.