Our Feeds


Thursday, September 16, 2021

Anonymous

JUST_IN: சண்டித்தனத்தினால் பதவியிழந்த லொஹானுக்கு எதிராக CID & பொலிஸ் தலைமைகத்தில் முறைப்பாடு



தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டி தற்போது பதவியை இழந்துள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவிலும் பொலிஸ் தலைமையகத்திலும் முறைப்பாடு இன்று பதிவுசெய்யப்படவுள்ளது.


சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற தேசிய இயக்கத்தின் தலைவரான சுதேஷ் நந்திமால் இன்று நண்பகலில் இந்த முறைப்பாட்டை செய்யவுள்ளதாக உறுதிசெய்தார்.


இதேவேளை, அநுதாரபுரம் சிறையில் இராஜாங்க அமைச்சரால் மிரட்டப்பட்ட தமிழ்க் கைதியின் விபரம் வெளியாகியுள்ளது.


யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன் என்ற 33 வயது கைதியே இவ்வாறு துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவர் கடந்த 2009ஆம் ஆண்டில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »