Our Feeds


Wednesday, September 15, 2021

Anonymous

BREAKING: தமிழ் கைதிகள் அச்சுறுத்தல் - அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார் லொஹான் ரத்வத்த - ராஜினாமா கடிதம் இணைப்பு



சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.


அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்றிருந்த    சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து, அவர்களில் இருவரை முழந்தாளிட வைத்து, தனது கைத்துப்பாக்கியை எடுத்து, சுட்டுக்கொன்றுவிடுவேன் என மிரட்​டியிருந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கட்டயிட்டனர். அதன் பின்னர், தனது இராஜினாமா கடிதத்தை லொஹான் ரத்வத்த அனுப்பிவைத்துள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »