அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினாரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தமது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யக் கூடுமென அரச உயர்மட்ட வட்டாரங்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளதாக தனியார் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் தற்போது நடந்துவரும் சூழ்நிலையில், அமைச்சரின் இந்த செயற்பாடு இலங்கை அரசுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அவரை உடனடியாக பதவிவிலக அரச மேல்மட்டம் கோரியுள்ளதாக அறியமுடிந்தது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. (t) .