Our Feeds


Saturday, September 25, 2021

Anonymous

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசு தீவிர ஆலோசனை!



உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இன்னும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.


தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரக்காலம் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், குறித்த ஆட்சிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவதற்கான அதிகாரம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு காணப்படுகிறது.

எனவே, இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அரசாங்கம் மேலும் ஒரு வருடத்திற்கு தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஆலோசித்து வருவதாக அறியமுடிகிறது.

தற்போதைய கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக பொதுமக்களுக்கு முறையான சேவைகளை செய்ய வாய்ப்புகள் அமையவில்லை எனவும், எனவே இதனைக் கருத்திற்கொண்டு தேர்தலை ஒத்திவைப்பதற்கான முடிவை எடுப்பதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »