Our Feeds


Wednesday, September 22, 2021

Anonymous

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பாரிய பூகம்பம்: பல கட்டடங்கள் சேதம்



அவுஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் இன்று ஏற்பட்ட பூகம்பததினால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.


உள்ளூர் நேரப்படி காலை 9.00 மணியளவில் ஏற்பட் இப்பூகம்பம் 5.8 ரிக்டர் அளவுடையதாக பதிவாகியிருந்தது.

10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இப்பூகம்பம் நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பாலும் உணரப்பட்டுள்ளது.

இப்பூகம்பத்தினால் மெல்பேர்ன் நகரில் பல கட்டடங்களின் சேதமடைந்தன. கட்டடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதியில் வீதிகளுக்கு ஓடினர்.

மக்கள் செறிவு மிகுந்த அவுஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் பாரிய பூகம்பங்கள் ஏற்படுவது அரிதாகும்.

6 ரிக்டருக்கு சற்று குறைவான இப்பூகம்பம் தென்கிழக்கு அவுஸ்திரேலியாவில் மிக நீண்ட காலத்துக்குப் பின் ஏற்பட்ட பாரிய பூகம்பமாகும் என மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பூகோளவியலாளர் மைக் சண்டிபோர்ட் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »