Our Feeds


Tuesday, September 21, 2021

SHAHNI RAMEES

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிக்கும் சாத்தியம் - இலங்கையில் பெற்றோல் விலை மீண்டும் அதிகரிக்குமா?


 உலகளாவிய ரீதியில் இயற்கை எரிவாயு விலை அதிகாிப்பு மற்றும் ஐரோப்பாவில் நிலவும் கடும் குளிர்காலம் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 5 டொலரால் அதிகரித்து, 80 டொலராக உயர்வடையக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


கேள்வி அதிகரிப்புக்கு போதுமான அளவு மசகு எண்ணெய் தற்போது விநியோகிக்கப்படுவதில்லை என அமெரிக்காவின் கோல்ட்மன் சாச் முதலீட்டு சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக எரிவாயு விலை அதிகரித்ததன் காரணமாக, மசகு எண்ணெய்க்கான கேள்வி மேலும் அதிகரிக்கக்கூடும். குளிர்காலநிலை மேலும் கடுமையாகினால், மசகு எண்ணெய்க்கான நாளாந்த கேள்வி 9 இலட்சம் பீப்பாய்களை விட அதிகரிக்கக்கூடும் என ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

தற்போது, பேரன்ட் வரை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74 டொலரை கடந்துள்ள நிலையில், குளிர்காலநிலையின் பின்னர் எதிர்வரும் 6 மாதங்களினுள் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர் வரை உயர்வடையக்கூடும் என பேங்க் ஒஃப் அமெரிக்கா சர்வதேச ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »