Our Feeds


Saturday, September 18, 2021

SHAHNI RAMEES

கடல் வழியாக இலங்கை வந்த புகையிரத பெட்டிகள்!

 


சென்னையில் அமைந்துள்ள IFC தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மேலும் 20 புகையிரத பெட்டிகள் Franbo Progress கப்பல் ஊடாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்திய கடன் திட்டத்தின் ஊடாக 160 புகையிரத பெட்டிகளை இந்தியா வழங்கவுள்ள நிலையில், இவைகளின் இறக்குமதிக்காக 82.64 டொலர் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டும் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அதன்படி குறித்த பெட்டிகளின் கொள்வனவுக்காக 100 மில்லியன் செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த புகையிரத பெட்டிகள் (M11) ரக புகையிரத இயந்திரங்களை பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, நாட்டின் பிரதான பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 160 புகையிரத பெட்டிகளில் 17 இயந்திர பெட்டிகள், சரக்கு புகையிரதங்களுக்கான 8 இயந்திர பெட்டிகள், 41 மூன்றாம் வகுப்பு பெட்டிகள், 42 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 13 குளிரூட்டப்பட்ட பெட்டிகள் என்பன உள்ளமை குறிப்பிடத்தக்கது.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »