இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் மத்தியில், கருப்பு பூஞ்சை நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த ஜுன் மாதம் முதல் படிப்படியாக அதிகரித்து வருவதை, சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
இதன்படி, கடந்த ஜுன் மாதம் முதல் இதுவரையான காலம் வரை 12 கருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பூஞ்சை திணைக்கள விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜுன் மாதம்
- இரத்தினபுரி வைத்தியசாலையில் 02 நோயாளர்கள்
ஜுலை மாதம்
- திருகோணமலை வைத்தியசாலையில் ஒரு நோயாளர்
ஆகஸ்ட் மாதம்
- கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 02 நோயாளர்கள்
செப்டம்பர் மாதம்
- கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 02 நோயாளர்கள்
- இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 01 நோயாளர்
- கராபிட்டி போதனா வைத்தியசாலையில் 01 நோயாளர்
- களுபோவில போதனா வைத்தியசாலையில் 01 நோயாளர்
கொவிட் தொற்றுக்குள்ளாகும் நீரிழிவு நோயாளர்கள் உடலிலுள்ள சீனியின் அளவை 100 வீதம் சமநிலையாக வைத்திருப்பது கட்டாயமானது என விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட அனைத்து கருப்பு பூஞ்சை நோயாளர்களும் நீரிழிவு நோய் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளவர்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
நீரிழிவு நோய் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு, சீனியின் அளவை உரிய வகையில் பேணாதவர்களே, கருப்பு பூஞ்சை நோய் தொற்றை எதிர்நோக்கியுள்ளனர் என மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பூஞ்சை திணைக்கள விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர கூறுகின்றார்.