Our Feeds


Saturday, September 18, 2021

SHAHNI RAMEES

ஆபரணத்தை லொஹான் கொள்ளையிடவில்லை

 

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவரால் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு பொறுப்பை ஏற்று பதவி விலகியுள்ளமையானது. நாட்டுக்கு முன்னுதாரணமான செயல் என தெரிவித்துள்ள கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, தவறொன்றை இழைப்பதை விட அந்த தவறுக்கு மன்னிப்பு கோரி பதவி விலகியமையானது சிறந்த பண்பு என்றார்.

எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தில் இதற்கு முன்னர், இவ்வாறான எவரும் தவறு செய்த எவரும் அவர்களாகவே முன்வந்து இவ்வாறு முன்மாதியாக செயற்படவில்லை என்றும் எனவே லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு, முன்மாதிரியான செயற்பாடு இடம்பெறவில்லை.

இதன்போது, அவர் இராஜாங்க அமைச்சில் ஒன்றை மாத்திரமே துறந்துள்ளார் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், லொஹான் ரத்வத்த தங்க ஆபரண கொள்ளைக்குச் சென்றிருந்தால், ஆபரணங்கள் கைத்தொழில் அமைச்சிலிருந்தும் பதவி விலகியிருப்பார் என்றார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என பேராயர் உள்ளிட்டவர்கள் கூறிவரும் நிலையில், அவ்வாறு யார் கைதுசெய்யப்படாமல் மிகுதியாகவுள்ளனர் என பகிரங்கமாக தெரவிக்க வேண்டும் என்றார்.

பேராயர் மற்றும் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்த்த ஞாயிறு தொடர்பான வழக்கு விசாரணையில் காலதாமதம் ஏற்படுவதாக தோன்றலாம். அது இயல்பான விடயம். ஆனால் சட்டம் செயற்படுவதற்கு அமைய தான் சகல விடயங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »