Our Feeds


Saturday, September 18, 2021

SHAHNI RAMEES

சீன தூதுவர் ஷெங் பிரித்தானிய பாராளுமன்றுக்கு வர தடை


 சீனாவில் பிரித்தானிய எம்.பி.க்கள் பலர் மற்றும் சகாக்களுக்கான தடை இருக்கும் வேளையில் பிரித்தானியாவுக்கான சீன தூதுவர் ஷெங் ஷேகுவாங்குக்கு பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஷெங் ஷேகுவாங் புதனன்று அனைத்துக் கட்சி குழுவினர் ஏற்பாடு செய்த ஒரு வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டியிருந்தது.

ஆனால் எதிர்ப்புக்களை அடுத்து, சபாநாயகர்கள், சேர் லின்ஸேயும், மெக் போலும் இதனை நிராகரித்தனர். இதுபற்றி சீன தூதரகம் கூறுகையில், இது இரு நாடுகளின் ஆர்வத்துக்கும் தீங்கிழைக்கும் இழிவான மற்றும் கோழைத்தனமான  ஒரு முடிவாகும் என்று தெரிவித்தது.

இரண்டு அரசாங்கங்களுக்கும் இடையில் பதற்றங்கள் உச்ச நிலையில் இருந்த வேளையில், டெய்லி டெலிகிராஃப் முதன் முதலாக இச்செய்தியை வெளியிட்டது.

நாட்டைப் பற்றி பொய்யான விடயங்களை பரப்புவதாக குற்றஞ்சாட்டி மார்ச் மாதத்தில் ஐந்து எம்.பி.க்கள் மற்றும் 2 சகர்களுக்கு எதிராக  சீனா பயணத்தடை, சொத்து முடக்கம் என்பனவற்றை  விதித்தது. சின்ஸியாங்கில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக முதல் தடைகளை விதித்த பிரித்தானியாவின்  முடிவுக்கு சீனாவின் இந்த நமவடிக்கை பதிலாக அமைந்தது.

சீனாவால் தடைவிதிக்கப்பட்ட சேர். லேய்ன் டங்கன் ஸ்மித், டொம் டுஜன்டத், நுஸ்ரத் கார்னி, நீல் ஓ பிரையன் மற்றும் டிம் லோட்டன் ஆகிய கன்ஸர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.க்கள் ஐவரும் மற்றும் சகாக்களான அல்டன் , பரோனஸ் கெனடி ஆகிய இருவரும் தமது  கவலையை வெளிப்படுத்தி சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.

அந்தக் கடிதத்தில் அவர்கள் சீன அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையானது ஒரு தாக்குதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது உறுப்பினர்களை குறிவைத்து நடத்தப்பட்டதல்ல. பாராளுமன்றம்மீது - எல்லா பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற தெரிவுக்குழு ஆகியவற்றின்மீது நடத்தப்பட்டதாகும். இத்தகைய தடைளை சரிபார்க்கவும், ஊக்குவிக்கவும் நாங்கள் வேலைசெய்யும் இடத்தை ஒரு தளமாக மாற்ற நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது கௌரவத்துக்குரிய உறுப்பினர்களால் பகிரப்பட்டதாகும். இந்தப்பயணம் தொடரணே;டுமா கூடாதா என்பதை முடிவு செய்வதற்கான நடவடிக்கை இதுவாகும்.

 சீன அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதி பிரித்தானியாவுக்கு வருகை தருவதும் இங்குள்ள வசதி வாய்ப்புகளை பயன்படுத்துவதும் இந்த பாராளுமன்றத்தினருக்கு வேதனையை ஏற்படுத்தக்கூடிய நினைத்துப்பார்க்க முடியாத விடயமாக உள்ளது என்று அவர்கள் அந்தக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

சீன தூதுவரின் தடையை வரவேற்று பாராளுமன்ற உறுப்பினர் நுஸ்ரத் கார்னி பி.பி.சி.க்கு பேட்டியளிக்கையில்  பாராளுமன்றத்தினருக்கு தடை விதிப்பது பாராளுமன்றத்திற்கும் எங்கள் ஜனநாயகத்துக்கும் விதிக்கப்படும் நேரடி அச்சுறுத்தலாகும்.

நாங்கள் எந்த ஆட்சியாலும் மௌனிக்கப்படமாட்டோம். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அர்த்தமற்ற   தடைகளுக்கான பிரசார கருவியாக எங்கள் பாராளுமன்றம் மாறாது என்று கூறினார்.

சபாநாயகர் சேர் லின்ஸே  விடுத்துள்ள ஓர் அறிக்கையில்  தான் வழமையாக தூதுவர்களுடன் கூட்டம் நடத்துவது நாடுகளிடையேயும் பாராளுமன்றத்தினரிடையேயும் நீடித்த உறவை ஏற்படுத்துவதற்கேயாகும்.  ஆனால் எங்கள் உறுப்பினர்கள்மீது சீனா தடைவிதித்திருக்கும் நிலையில் சீன தூதுவர்மீது நாங்கள் விதித்திருக்கும் தடை பொருத்தமானது என்றே கருதுகிறேன். அவர்கள்மீதான தடை நீக்கப்படுமானால் நிச்சயமாக இது ஒரு விடயமாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »