Our Feeds


Wednesday, September 29, 2021

Anonymous

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் அறிவிப்பு வெளியானது.



எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசாங்கம் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாயின், எதிர்வரும் நவம்பர் மாதம் பல்கலைக்கழகங்களை மீள திறக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல வருடங்களுக்கு பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பல்கலைக்கழகங்களுக்கு 42,000 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளனர்.

எதிர்காலத்தில் இவ்வாறான அதிகரிப்பினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »