Our Feeds


Tuesday, September 21, 2021

SHAHNI RAMEES

கொரோனா நோயாளிகள் குளித்தால் நியூமோனியா ஏற்படுமா? - விசேட மருத்துவ நிபுணர் விளக்கம்


 கொவிட் தொற்றுக்கு உள்ளான நபர், கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் குளிக்கலாமா? அவ்வாறென்றால் எத்தனை நாட்களின் பின்னர் குளிக்கலாம் போன்ற கேள்விகள் தற்போது சமூகத்தில் எழுந்துள்ளன.


இது தொடர்பில், இன்று இடம்பெற்ற கொவிட் பரவல் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான விசேட செய்தியாளர் சந்திப்பில் கொழும்பு மருத்துவப் பீட பேராசிரியர் இந்திக்க கருணாரத்த கருத்து வெளியிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தொற்றுக்கு உள்ளானோர், தடுப்பூசி பெற்றவர்கள் எத்தனை நாட்களின் பின்னர் குளிப்பது என்ற கேள்வியை பிரதானமாக எம்மிடம் முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறான சந்தேகங்களுடன் சிலர் 21 நாட்களும், இன்னும் சிலர் 30 நாட்களும் கூட நீராடாமல் இருந்திருகின்றனர் என்பது ஆச்சரியமளிக்கிறது.

சுவாச கோளாறுகளை கொண்டுள்ளவர்கள் நீராடுவதனால் நியூமோனியா ஏற்படும் என எந்த மருத்துவ குறிப்புகளும் தெரிவிக்கவில்லை.

நியூமோனியாவால் ஏற்படும் கொவிட் மரணங்கள் அதிகரிப்பதால் பலருக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நீராடுவதால்  நியூமோனியா ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

எனவே, நீராடுவதனை தவிர்ப்பதால் பல்வேறு சரும நோய்களும் ஏற்படக்கூடும். ஆகவே, நீராடி சுத்தமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »