Our Feeds


Tuesday, September 21, 2021

Anonymous

அகில இலங்கை மருத்துவ சங்கம் நிதி அமைச்சருக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம்



ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கு முன்பு மது விற்பனையை அனுமதிப்பது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என அகில இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.


நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு உத்தரவு மீறல்கள், குடும்ப வன்முறை மற்றும் குழந்தைகள் துஸ்பிரயோகம் என்பன அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கொரோனா வைரஸின் பரவலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மது பயன்பாட்டினால் கொரோனா நோயாளிகளை நிர்வகிப்பது என்ற, சுகாதாரத் துறைக்கு மற்றொரு சுமையைச் சேர்க்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, மது விற்பனையை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சரிடம் மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »