Our Feeds


Friday, September 17, 2021

SHAHNI RAMEES

கருப்பு பூஞ்சை நோயை அடையாளம் காண வசதி இல்லை

 


கருப்பு பூஞ்சை நோயாளிகளை அடையாளம் காணும் சோதனைகளை முன்னெடுப்பதற்கான வசதி பொதுமானளவில் இல்லை என, எம்.ஆர்.ஐ.யின் மைக்காலஜி துறை தலைவர் டாக்டர் ப்ரிமாலி ஜெயசேகர தெரிவித்தார்.

இத தொடர்பில் தொடர்ச்துரைத்த அவர்,  இந்த நோயால் இதுவரை யாரும் இறக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த நோயின் அறிகுறிகள் மூக்கின் இருபுறமும் கருமையாவதும் மற்றும் கண்களைச் சுற்றி இந்த கருப்பு பூஞ்சை பரவுவதும் ஆகும்.

இந்த நோய்களைக் கண்டறிய நம்மிடம் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை வளங்ளே உள்ளன. எனவே, நாம் கொரோனா தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்த கரும்பூஞ்சை நோய் பரவாமல் தடுக்கும், இல்லையெனில் இந்த சோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் எங்களிடம் இருக்காது.

'இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஓரளவுக்குகு காப்பாற்ற அறுவை சிகிச்சை சாத்தியம் உள்ளது, ஆனால் சில நோயாளிகள் அடையாளம் காணப்படவில்லை, ஏனெனில் நோயைக் கண்டறிய திசு சோதனை தேவைப்படுகிறது மற்றும் சோதனைக்கு மயக்க மருந்து தேவைப்படுகிறது.

'கொரோனாவுக்கான சில மருந்துகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகின்றன. எனவே, நீங்கள் கொரோனாவுக்கு ஏதேனும் சிகிச்சை பெறுகிறீர்கள் என்றால், கரும்பூஞ்சை நோய்க்கு மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »