Our Feeds


Tuesday, September 21, 2021

Anonymous

சிம்பாபே நாட்டை முகாபே நாசமாக்கியது போல் கோட்டா அரசு பயணிக்கிறது - பாராளுமன்றில் கபீர் ஹாஷீம் விமர்சனம்.



(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)


ஸிம்பாப்பேவை அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி முகாபே நாசமாக்கி வீழ்ச்சியின் பாதையில் கொண்டு சென்றதைபோன்று கோட்டாபய ராஜபக்க்ஷவின் அரசாங்கமும் செயற்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் 65 ஆயிரம் கோடி ரூபாவும் இந்த ஆண்டில் ஜூலை மாதத்தில் 20, 800 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளன. அண்மையில் 50,000 கோடி ரூபா அச்சிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ஸிம்பாப்பேவின் நிலைமையை நினைவுபடுத்துகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் சபையில் குற்றம் சுமத்தினார். அரசாங்கத்தினால் இனியும் ஆட்சியைக் கொண்டு செல்ல முடியவில்லை என்றால் மக்கள் கருத்தை கேட்டறிந்து ஆட்சியை கொண்டு செல்ல முடிந்த தரப்பிடம் ஆட்சியை கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் அவர் இன்று இன்று (21) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ஸிம்பாப்பேவை எடுத்துக் கொண்டால் ஒரு அமெரிக்க டொலருக்கு 280 கோடி சிம்பாவே ரூபா கொடுக்க வேண்டியிருந்தது. இறுதியாக அமெரிக்க டொலர்களில் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்க நேர்ந்தது. முகாபே என்ற ஜனாதிபதி நாட்டின் விவசாயத்துறை மீது கைவைத்தார், இராணுவ மயமாக்கி நாட்டின் உற்பத்தியை முழுமையாக நாசமாக்கினார்.

அடிப்படைவாதத்தை பரப்பி, நாட்டுக்குள் பிரச்சினைகளை உருவாக்கி, வெளிநாடுகளிடம் கடன்களை பெற்று முடியாத கட்டத்தில் நாட்டில் பணம் அச்சடித்தார். உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உணவுகளை கூட இறக்குமதி செய்தார். இதுவே ஸிம்பாப்பேவை வீழ்த்தியது. இந்த நாடும் அதே பாதையில் பயணிக்கிறது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »