Our Feeds


Saturday, September 25, 2021

Anonymous

மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் விசேட நிதி ஒதுக்கீடு – அரசின் புதிய திட்டம் இதோ…



கிராமிய பிரதேச அபிவிருத்திக்காக இம்முறை வரவு செலவு திட்டத்தில் பிரதேச இணைப்புக்குழுவின் தலைவர்களுக்கும், இறுதி மாகாண சபைகளில் அங்கம் வகித்த உறுப்பினர்களுக்கும் ,உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்குமாக தனித்தனியே அபிவிருத்திக்குரிய நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதனடிப்படையில் அபிவிருத்தி சபை தலைவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நிதியும், இறுதியாக மாகாண சபைகளில் அங்கம் வகித்த உறுப்பினர்களுக்கு கட்சி பேதமில்லாமல் 20 மில்லியன் ரூபாய் நிதியும், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோருக்கு 4 மில்லியன் ரூபாய் நிதியும் அபிவிருத்தி பணிகளுக்காக வழங்கப்படவுள்ளன .

மேலும் மாகாண சபைகளுக்குட்பட்ட ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் 3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமசேவகர் பிரிவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 1.2 மில்லியன் ரூபா மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி தேவைகளுக்காகவும் ,1.2 மில்லியன் பொது அபிவிருத்தித் தேவைகளுக்காகவும் மேலும் 6 மில்லியன் ரூபாய் சுற்றாடல் மற்றும் சமூக நல அபிவிருத்திக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமசேவகர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை ”கம சமக பிலிசந்தரக்“ எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்துவித பிரதேச அபிவிருத்திக்குரிய மானியங்கள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் செயற்பாடு மக்கள் பிரதிநிதிகளுடையது என்றும் இந்த மானியங்கள் விரைவாக மக்களை சென்றடைவதே இம்முறை வரவு செலவு திட்டத்தின் பிரதான நோக்கமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »