Our Feeds


Thursday, September 23, 2021

Anonymous

தடுப்பூசி பெறாதவர்களுக்கு விரைவில் சிக்கல் - விசேட வைத்தியக் கலாநிதி எச்சரிக்கை


 

எம்.எஸ்.எம்.ஹனீபா


கொரோனா தடுப்பூசி பெறாத 20 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒன்றுகூடலில் இருந்தும் பொது இடங்களுக்குச் செல்வதிலிருந்தும் அரசாங்கத்தால் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.


இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 20 வயதுக்கு மேற்பட்டவர்கள், தத்தமது சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் வழங்கும் மையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.


எதிர்வரும் காலங்களில் தடுப்பூசிகளை பெறலாமென எதிர்பார்த்து, இப்போது கிடைக்கின்ற தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாது விட்டால் பலத்த பாதிப்பு ஏற்பட்டு, மரணம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் காணப்படுமெனவும் எச்சரித்தார்.


20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது. வதந்திகளை நம்பாமல் எம்மையும் சமூகத்தையும், நாட்டையும், கொவிட்19 தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள உங்களுக்கான தடுப்பூசியை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.


உலக சுகாதார ஸ்தாபனம் சினோபார்ம் தடுப்பூசியை அங்கிகரித்துள்ளது. ஆகவே, இத்தடுப்பூசி மிகவும் சிறந்த பாதுகாப்பைக் கொடுக்கும்.


மேலும், கொரோனா வைரஸ் திரிவடைதல் பாரிய சவாலாக எதிர்காலத்தில் வருமாக இருந்தால், தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் இதிலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »