அநுராதபுரம் சிறைச்சாலையின் சிசிடிவி காட்சிகளை நீக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புச் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஒருவர் குடிபோதையில் சிறைக்குள் நுழைந்தபோது கைதிகளை துன்புறுத்திய போது சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தங்கள் பொறுப்புகளை புறக்கணித்து அமைச்சரின் நடத்தைக்கு அதிக இடம் கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு சுயாதீன குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும், துப்பாக்கியுடன் சிறைக்குள் நுழைந்த அமைச்சரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்