சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்திற்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றின் ஊடாக, அவர் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் முழந்தாளிட செய்யப்பட்டு, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டமை பாரிய மனித உரிமை மீறல் என அவர் கூறியுள்ளார்.
பௌத்தம் பற்றி வகுப்பெடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் வக்கிர மனசை இது காட்டுகின்றதா? என மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.